கல்வி உரிமைச்சட்ட இணையதளம் செயலிழப்பு - சேர்க்கை விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல்!

தமிழக அரசின் கல்வி உரிமை சட்ட இணைதளம் செயலிழந்துள்ளதால், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தரமான கல்வியைப் பெறும் வகையில், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுவருகின்றனர்.

இத்திட்டத்தில் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்புக்கான சேர்க்கைகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் சேரும் குழந்தைகள் 8ம் வகுப்பு படிக்கும் வரை ஆகும் செலவை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கின்றன.

அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான RTE விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக RTE இணையதளம் செயலிழந்துள்ளதாகவும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற முடியவில்லை எனவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.



முதல் கட்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவேற்ற நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இணையதளம் செயலிழப்பால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு கால நீட்டிப்பு வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...