கனிம வளங்கள் கடத்தலை தடுத்திடுக..! - கிணத்துக்கடவில் பாஜகவினர் போராட்டம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியிலிருந்து கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி பாஜகவினர் திடீர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும், கனிமவளங்களை கடத்திச் செல்லும் வாகனங்களால் சாலைகள் சேதம் அடைந்து வருவதாகவும் கூறி அப்பகுதி விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பத்தாம் நெம்பர் முத்தூர் பகுதியில் கல்குவாரிகள் குறித்து செய்தி சேகரித்து சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கல்குவாரி உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர்.

இதுச்சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் சிவப்பிரகாஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இந்த நிலையில் இன்று கல்குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்தப்படுவதை தடுக்ககோரி மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து சம்பவ அறிந்து சென்ற போலீசார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

பாஜகவினர் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...