பதவி உயர்வு வழங்க வேண்டும்..! - உடுமலையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காலிப்பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றகோரி அரசுக்கு வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெதப்பம்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட இணைசெயலாளர் ராணி, ஒன்றிய செயலாளர் லீலா, திருப்பூர் மாவட்டஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள் கூடுதலாக 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். அதனை சரி செய்திட வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

10 ஆண்டு பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் சிலிண்டர் பில்லில் உள்ள படி ரூ.1205 வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே கட்ட வேண்டும், அங்கன்வாடி உதவியாளர்களை 5 பதிவேடுகள் மட்டுமே பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளின் நலன் கருதியும் பணியாளர்களின் நலம் கருதியும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத கால விடுமுறை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...