பழனி புதிய மாவட்டத்தில் உடுமலை இணைப்பா? - சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

திண்டுக்கல்லை பிரித்து பழனி தனி மாவட்டமாக உருவாக்கும்பட்சத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையும் பழனியுடன் இணைப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் மக்களிடையே பரபரப்பு நிலவிவருகிறது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது எனவும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரம், பழனி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து பழனியை தலைமை இடமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்க அமைச்சர் சக்கரபாணி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள் பழனியை தனி மாவட்டமாக அறிவித்தால், பழனி மலை, திருமூர்த்தி மலை, ஆனைமலை, கொடைக்கானல் ஆகிய மலைகள் அதற்குள் வரும் பழனி முக்கியமான ஆன்மீக நகரம் என்பதால் இந்துக்களின் ஓட்டுக்களை பெற முடியும் என வலியுறுத்தியதாக உடுமலை பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பழனி மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...