கோவை பலத்த காற்றுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டியெடுத்துவந்த நிலையில், கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் இன்று பலத்த காற்று மற்றும் இடியுடன் பெய்த கனமழையல் மக்கள் மகிழ்ச்சிடைந்தனர்.


கோவை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.



இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



முதலில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கியவாறு அதிக காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்த நிலையில் சட்டென மாறி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



இப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...