கோவை அருகே வீடு புகுந்து பைக் திருடும் இளைஞர் - வீடியோ வெளியீடு

மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து பைக் திருடும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் இளைஞர், பைக்கை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எல்.எஸ். புரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வீட்டின் கதவை திறந்து பைக் திருட முயன்றார். வாகனம் பூட்டு போட்டு இருந்ததை கண்டு திரும்பிய இளைஞர், அப்பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மற்றொரு பைக்கையும் திருட முயன்றார்.

இந்தச் சம்பவம் அங்கிருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் உள்ள நபர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வீடுகளிலும், தெருக்களிலும் பொது இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். கோடை காலம் என்பதால் வீடுகளைத் திறந்து வைத்து உறங்க வேண்டாம். வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை பூட்டி விட்டுச் செல்லுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...