உக்கடத்தில் வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகபாம்பை பிடித்த சினேக் அமீன்

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் வீட்டில் மறைந்திருந்த 5 நீளம் கொண்ட நாகபாம்பை பாம்புபிடி வீரர் சினேக் அமீன் பத்திரமாக மீட்டு, வனச்சரகர் சந்தியா உதவியோடு பெரியகுளக்கரையில் விடப்பட்டது.


கோவை: உக்கடம் பகுதியில் வீட்டில் பதுங்கியிருந்த நாகபாம்பை பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ரோஸ்கார்டன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் பாம்பு இருப்பதாக கிரீன்கேர் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்புபிடி வீரரான சினேக்அமீன் உதவியுடன் கிரீன்கேர் அமைப்பினர் அந்த வீட்டிற்குச் சென்று சோதனை செய்த போது, பழைய பொருட்களைச் போட்டு வைத்திருந்த இடத்தில் பதுங்கியிருந்த 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பை பத்திரமாக மீட்டார். பின்னர் மதுக்கரை வனச்சரகர் சந்தியாவிற்க்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் பாம்பை உக்கடம் பெரியகுள கரைப்பகுதியில் விட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...