உடுமலையில் பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வுக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணர்வு கல்விக்கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண்மை குழுவானது அமைக்கப்பட்டு மாதந்தோறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

பள்ளிக்கு அளிக்கப்படும் நிதி மற்றும் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஆகியவை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் தீர்மானத்தின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்வருகிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உடுமலை ஒன்றிய பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் கிருத்திகா, பள்ளி மேலாண்மை குழு பற்றியும், இல்லம் தேடி கல்வி பற்றியும், நம்ம ஊரு நம்ம பள்ளி என்ற திட்டத்தைப் பற்றியும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறினார்.

பள்ளி உதவி ஆசிரியர் கண்ணபிரான், பள்ளி மேலாண்மை குழு முக்கியத்துவம் பற்றியும், இந்த வருட பள்ளி மேலாண்மை குழு மூலமாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். இறுதியாக, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சுஜினி நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...