உடுமலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், மாநில மையத்தின் வழிகாட்டுதலின்படி உடுமலைப்பேட்டை வட்டக்கிளை சார்பாக ஆர்பப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம், பதவி உயர்வில் முன்னுரிமை,பயணப்படி உயர்வு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை பணியில் சேர்ந்த உரிய காலத்திற்குள் வழங்குதல், ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி ஆகியவற்றை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வழங்க வலியுறுத்தப்பட்டது.



இதில், திருப்பூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் உடுமலைப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த 20 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...