தாராபுரத்தில் நீதிமன்றங்களைப் பார்வையிட்ட ஆதிதிராவிட நலத்துறை விடுதி மாணவிகள்!

தமிழகத்தில் முதல்முறையாக நீதிமன்ற செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில், தாராபுரத்தில் உள்ள நீதிமன்றங்களை ஆதிதிராவிட நலத்துறை விடுதி மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் தலைவர் சார்பு நீதிபதியான தர்ம பிரபு செய்திருந்தார்.


திருப்பூர்: தமிழகத்தில் இதுவரை சட்டசபை கூட்டத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சென்று பார்த்து வந்தனர்.தற்போது, தமிழகத்தில் முதல் முறையாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தங்கும்விடுதியில் உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவிகள் உயர்கல்வியில் படிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்,நீதிமன்ற செயல்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தாராபுரத்தில் உள்ள நீதிமன்றங்களை பார்வையிடஅனுமதி அளிக்கப்பட்டது.



அதன்பேரில் அரசு பள்ளி மாணவிகளின் 27 பேர் மற்றும் 3'வது மாவட்ட நீதிமன்றம் சார்பு நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் ஒரு மணி நேரம் அமர்ந்து அதன் செயல்பாடுகளை அறிந்து கொண்டனர்.



மேலும்,நீதிமன்றத்தை நேரில் சென்று பார்வையிட அனுமதி அளித்த வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதியான தர்ம பிரபுவுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.



இது குறித்து மாணவி ஷாலினி கூறுகையில், நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். என்னால் தினமும் பள்ளிக்கு சென்று பயிலாத முடியாத காரணத்தினால் நான் தாராபுரம் ஆதி திராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று பயின்று வருகிறேன்.

தற்போது, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறேன். இந்த நிலையில், தாராபுரம் நீதிபதி எங்களை தாராபுரம் நீதிமன்ற செயல்பாடுகளை பார்க்க அனுமதி அளித்ததன் பேரில்,எங்கள் விடுதியில் உள்ள மாணவிகள் அனைவரும் நீதிமன்ற செயல்பாடுகளை பார்த்து தெரிந்துகொண்டோம். நல்ல மதிப்பெண்கள் பெற்று நல்ல அரசு கல்லூரியில் சேர்ந்து படித்து உயர்ந்த நிலைக்கு வருவேன், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...