கோவையில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - போலீஸ் விசாரணை

கோவை நல்லாம்பாளையத்தில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டன் 6வது வீதியில் குடியிருந்து வருபவர் சுரேஷ்குமார். வழக்கறிஞரான இவர், தனது மனைவி மகள் ஆகியோருடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மூகாம்பிகா கோவில்களுக்கு சென்றனர்.

அப்போது, வீட்டின் மேல் புறம் குடியிருக்கும் வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் மற்றும் இரவு நேரங்களில் பார்த்துக் கொள்ள காம்பவுண்ட் கேட்டின் சாவியை கொடுத்து சென்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், வாட்ச்மேன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது முன்புற கிரில் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், மேலும் வீட்டின் உள்ளே உள்ள மெயின் கதவு திறந்து கிடப்பதையும் பார்த்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக, உறவினர்களுக்கு தகவல் சொல்லி போலீசாருடன் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு ஒரு சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...