சூலூரில் மின்னணு கழிவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி, சூலூர் ஆர்விஎஸ் கல்லூரியில் தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மின்னணு கழிவுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது ஆர்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, சூலூர் பேரூராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பேரணி குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள், மக்கள் அன்றாட வாழ்வில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த கழிவுகளை முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...