கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆணையர் ஆய்வு - தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுரை

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திட்ட பணிகளை விரைவில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு ஆணையர் பிரதாப் உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.88க்குட்பட்ட குனியமுத்தார்‌, ரைஸ்மில்‌ சாலையில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடூபட்டூ வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்காத குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திடுமாறு தூய்மைப்பணியாளா்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்‌.



இதைத் தொடர்ந்து, குனியமுத்தூர்‌, அரசு பணியாளர்‌ குடியிருப்பு பகுதியில்‌ உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ மாநகராட்சி ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர், மருத்துவமனையின்‌ பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர், ரைஸ்மில்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ புதிதாக கட்டப்பட்டுவரும்‌ 4 வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமானப்பணிகளை அவர் பார்வையிட்டார்.



அரசு பணியாளர்‌ குடியிருப்பு பகுதியில்‌ உள்ள பூங்காவை ஆய்வு செய்த ஆணையாளர் பிரதாப், புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்‌.



இதைத் தொடர்ந்து கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தில்‌ ஆய்வு செய்த அவர்,



குளத்தில்‌ உள்ள ஆகாயத்தாமரை மற்றும்‌ பிளாஸ்டிக்‌ குப்பைகளை அகற்றி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு 18க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ ரூ.90 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமானபணி,



வார்டு 30 க்குட்பட்ட கணபதி, கணேஷ்‌ லே-அவுட்‌ நகரில்‌ பொதுநிதியிலிருந்து ரூ.30 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர் வடிகால்‌ கட்டுமானபணி,



வார்டு எண்‌.28க்குட்பட்ட ஆவாரம்பாளையம்‌ பகுதியில்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ நிதியிலிருந்து ரூ.10.20 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ பேருந்து நிலையம்‌ கட்டுமானபணிகளை ஆணையர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.



அதேபோன்று, வார்டு 27க்குட்பட்ட ஆவாரம்பாளையம்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டூத்திட்டம்‌ பேஸ்‌-1 கீழ்‌ ரூ.57.38 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 855 மீட்டர்‌ தொலைவிற்கு நடைபெற்றுவரும்‌ சாலைப்‌ பணி.



வார்டு எண்‌.26க்குட்பட்ட பீளமேடு பகுதியில் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுவரும்‌ நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணி உள்ளிட்ட பணிகளை ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு, பணிகள் குறித்து பொறியாளர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன்,‌ தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, பாபு, உதவி ஆணையர்‌ ௮ண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ சத்பா, சுகாதார அலுவலர்‌ ஆண்டியப்பன்‌, உதவி பொறியாளர்கள்‌ கணேசன்‌, கனகராஜல்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...