கோவையை கலக்கும் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா - செல்பி எடுக்க குவியும் பயணிகள்!

கோவை காந்திபுரம் - சோமனூர் இடையே செல்லும் தனியார் பேருந்தின் ஓட்டுநரான ஷர்மிளாவுக்கு அப்பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநரான தந்தை மகேஷ் தான், பேருந்து ஓட்டுனராக முழு காரணம் என ஷர்மிளா தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையை கலக்கும் தனியார் பேருந்து பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



கோவை மாவட்டம் காந்திபுரம் - சோமனூர் இடையே செல்லும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் ஷர்மிளா.



பேருந்தை அனாயசமாக வளைத்து வளைத்து ஓட்டும் இவரது டிரைவிங்குக்கு அந்த பேருந்தில் பயணிக்கும் கல்லூரி மாணவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.



ஆணுக்குப் பெண் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் ஷர்மிளாவை, அந்த பேருந்தில் பயணிப்பவர்களும் கடந்து செல்பவர்களும் பாராட்டி விட்டு தான் செல்கின்றனர். மேலும் செல்பியும் எடுத்துக் கொள்கின்றனர்.



இதுதொடர்பாக ஷர்மிளா பேசியதாவது, எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டும் எனது தந்தை மகேஷ் தான் எனக்கு ஊக்கம் அளித்தார். முதலில் நான் அந்த சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி தான் டிரைவின் கற்றுக் கொண்டேன். அதன் பின்ன தான் தந்தைக்கு உதவியாக பலமுறை சிலிண்டர் ஆட்டோவை ஓட்டியுள்ளேன்.

இதன் காரணமாகவே ஓட்டுநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததன் காரணமாக கனரக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி பெற்று பின்னர் அதற்கான லைசன்சும் வாங்கினேன்.

டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகச் சுழிப்புடன் தான் பார்ப்பார்கள், ஆனால் எனக்கு எந்த வேலையை எல்லோரும் குறைவாக பார்த்தார்களோ அதன் மீதுதான் ஆர்வம் அதிகரித்தது. 7வது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. வீட்டிலும், உனக்கு எதில் விருப்பமோ அதை செய் என கூறிவிட்டாதால் கனவுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது.

நான் கனரக வாகன உரிமம் பெறுவதற்கும் என் அப்பா தான் முழு காரணம். நீ சாதிக்கனும்னு முடிவு பண்ணிட்டனா சாதிச்சிரு கோயம்புத்தூர்ல என் பொண்ணு தான் முதல் பெண் பஸ் டிரைவர்னு நான் பெருமையா சொல்லிக்குவேன் என கூறினார்.

பேருந்து பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், வழக்கமாக ஆண்கள் மட்டுமே பேருந்து இயக்குவது பார்த்துள்ளேன். தற்போது முதல்முதலாக இளம் பெண் ஒருவர் பேருந்து ஓட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது.

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக சர்மிளா திகழ்கிறார். ஆண் ஓட்டுனர்களிடம் பேசுவதற்கு எங்களுக்கு தயக்கம் இருக்கும் ஆனால், பெண் ஓட்டுனரிடம் எளிதில் அணுகி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...