பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதல் - இரண்டு மாணவிகள் காயம்

பல்லடத்தில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் மீது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் 2 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: பல்லடத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதிய விபத்தில், இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகள் இன்று பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றனர்.



வேன் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருமாள் கோவில் அருகே சென்றபோது சென்னையிலிருந்து குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்த லாரி பள்ளி வேன் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் வேனில் பயணித்த இரண்டு மாணவிகள் படுகாயமடைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் காயமடைந்த மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் போக்குவரத்து சரிசெய்து விபத்து உண்டான லாரி ஓட்டுநர் ராஜா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...