கோவையில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல் - இந்து அமைப்புகள் திரண்டதால் பரபரப்பு!

கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பிற்கு சென்ற சிறுவர்களை கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறி இந்து முன்னணி, பாஜகவினர் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல்நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற வகுப்பிற்கு சென்ற சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறி இந்து அமைப்பினர் காவல்நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாக கூறப்படுகிறது.



இதையறிந்த இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வெரைட்டிஹால் சாலையில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்டு, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.



இது குறித்து தகவல் அறிந்த கோவை மாநகர துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கரூர் 41 உயிரிழந்தோருக்கு அரசு வேலை: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...