ஆஸ்கர் தம்பதி பராமரிப்பில் இருந்த தர்மபுரி குட்டி யானை திடீரென உயிரிழப்பு

தர்மபுரியில் இருந்து கடந்த 16-ந்தேதி பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமிற்கு 3 மாதமே ஆன குட்டியானை கொண்டுவரப்பட்டது. ஆஸ்கர் நாயகர்களான பொம்மன், பெள்ளி பராமரிப்பில் இருந்த குட்டியானை திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.


நீலகிரி: தர்மபுரியிலிருந்து முதுமலை கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 3 மாத யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தாயை பிரிந்து கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 3 மாதமே ஆன ஆண் குட்டியான மீட்கப்பட்டு கடந்த 16-ந்தேதி பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.



அந்த யானை குட்டியை ஆஸ்கர் விருது பெற்ற எலிபன்ட் விஸ்ப்பரெஸ் என்ற ஆவணப்படத்தில் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினர் பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வரை உற்சாகமாக இருந்த இந்த குட்டி யானை நேற்று மாலை முதல் சோர்வடைந்து காணப்பட்டது.

தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு மருத்துவச் சிகிச்சை அளித்த நிலையில் இன்று அதிகாலை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.



இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் அதன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ததில் உடலில் கொடுக்கப்பட்ட பால் மற்றும் திரவ உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகாமலிருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரிய வந்தது.



இதையடுத்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறை உயர் அதிகாரிகள் இணைந்து இறந்த குட்டி யானைக்கான இறுதிச் சடங்கில் பூஜை செய்தும் மலர்களால் அதன் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...