போதைப்பொருளை பயன்படுத்தினால் இளமையை இழக்க நேரிடும்! - கோவை காவல் ஆணையர் அறிவுரை!

கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஏற்கனவே ஆண்கள் மட்டுமே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் ரவிடியிசத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போது, சில பெண்களும் இதில் இறங்கியிருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.


கோவை: போதைப் பொருள் விற்பனை மற்றும் ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.



இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, முதலமைச்சர் உத்தரவுபடி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் போதை பொருள் ஒழிப்பு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை அரசு கல்லூரியிலும் போதை பொருள் ஒழிப்பு குழு தொடங்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கோவை மாநகர காவல்துறை சார்பில் கல்லூரிகளுடன் இணைந்து, போதை பொருளின் தீமை குறித்து விளக்கமாக எடுத்து கூறி வருகிறோம். போதை என்பது எவ்வளவு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்கால சமுதாயத்தின் நலன் கருதி நாம் அனைவரும் தற்போது இது குறித்து பேசி வருகிறோம்.



இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருளாக இருந்தாலும் சரி, ரவுடியிசமாக இருந்தாலும் சரி காவல்துறை பார்த்து கொண்டு இருக்காது. அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்தும் போது, நமது இளமை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. எனவே நீங்களே இந்த பழக்கம் உங்களுக்கு தேவையா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்றால், ரவுடியிசத்தை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.



அதன்படி கோவையில் கடந்த சில வாரங்களாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் ஆண்கள் தான், ரவுடி மற்றும் போதை பழக்கத்தில் இருந்தனர். தற்போது ஒரு சில பெண்களும் ரவுடியிசம் மற்றும் போதை பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இது மிகவும் வருந்ததக்க கூடிய விஷயமாகும்.

போதை மற்றும் ரவுடியிசம் என வந்துவிட்டால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஒரே நடவடிக்கை தான். அதில் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் சட்டம் தன் கடமையை செய்யும். கோவையில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம்.

யார் யார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள் என்ற விபரமும் சேகரித்து வைத்துள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...