கோவை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதி - பட்ஜெட்டில் ஒதுக்கீடு!

கோவை மாநகராட்சியின் பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கவுன்சிலர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.


கோவை: கோவை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் பணிகளை மேற்கொள்ள தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கோவை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.



அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும், மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கோவை மாநகராட்சியில் 17 மேல் நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு என ரூ.50 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும்.

மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு கருவி ரூ.1 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நவீன சுத்திகரிப்பு கருவிகளை ரூ.20 லட்சம் செலவில் வருகிற கல்வியாண்டில் பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

பொது அறிவை மேம்படுத்தவும், வசதியற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டில் ஒரு பிரத்யேக மக்களை தேடி நூலகம் இயக்கப்பட்டு இதுவரை 4,800 மாணவர்கள் மற்றும் 440 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த நிதியாண்டில் கூடுதலாக ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும். மாநகராட்சி பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதேபோல மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்படும்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும், மேயரின் கள ஆய்வின் போதும் பொதுமக்களை கூறப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மாண்புமிகு மேயர் விருப்ப நிதி இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் இடம் பெற்றுள்ளது.

Newsletter

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...

கோவை மேற்கு மண்டலத்தில் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நடைபயணம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பள்ளி முதல் பொம்மனாம்பாளையம் கோயில் வரை, குப்பைகள...