நீலகிரியில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து பூங்கா பணியாளர்கள் நூதன போராட்டம்!

நீலகிரி மாவட்டத்தில் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள், நிரந்தர பணி, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்கள், சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த எட்டு நாட்களாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பூங்கா பணியாளர்கள் மரத்துக்கு மனு கொடுத்தல், ஒப்பாரி பாடல், குளத்திற்குள் இறங்கி போராட்டம் என பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒன்பதாவது நாளாக இன்றும் இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இன்று தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகளிடம் பிச்சை கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.



இதுவரை அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது. தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர போவதாவும் தெரிவித்தனர்.

பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் உதகை குன்னூர் கோத்தகிரி கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் பெரும் அளவு பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...