பல்லடத்தில் ரூ.200 கோடி மோசடி செய்தவர்கள் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை

பல்லடத்தில் பத்திரங்களை அடமானம் வைத்து 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யாமல் காவல்துறை மெத்தனபோக்கோடு செயல்படுவதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்தவர்களை கைது செய்யாமல் காவல்துறை அலட்சியமாக இருப்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்பா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன்கள் விஜயகுமார் மற்றும் சிவக்குமார். இருவரும் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பலரை நூல் வியாபாரத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாக கூறி அவர்களின் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.200 கோடிக்கும் மேல் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பு விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிவக்குமார், விஜயகுமார் மற்றும் அவரது மகன் ராகுல் பாலாஜி, பிரவீனா ஆகியோர் தங்களை தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி வீடு, இடம், நில பத்திரங்களை வாங்கி வங்கிகளில் அடமானம் வைத்து ரூ.200 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு பல்லடம் நீதிமன்றம் ஒரு மாதத்திற்கு முன் பிடிவாரண்ட் பிறப்பித்தும், போலீசார் அவர்களை கைது செய்ய தாமதப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன் என்பவர் பிரவீனா மீது அளித்திருந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து பிரவீனாவை தேடி வந்த பல்லடம் போலீசார் நேற்று பல்லடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பிரவீனாவை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருப்பூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தாங்கள் தினம், தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கைது செய்யப்பட்ட பிரவீனா விதவிதமான ஆடைகளில் சினிமா பாடலுக்கு "Facebook reels" போட்டுக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மோசடி கும்பலை கைது செய்யாமல் அலட்சியப்படுத்தி வருவதாகவும், மோசடி கும்பலுக்கு காவல்துறை துணை போவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறினர். எனவே இந்த மோசடி வழக்கினை சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...