கிணத்துக்கடவில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை - 15,000 வாழை மரங்கள் சேதம்!

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், வேளாண் துறையினர் முறையாக கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் நேற்றைய தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 15,000 வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.



இதன் காரணமாக கிணத்துக்கடவு அருகேயுள்ள பொட்டையாண்டிபுறம்பு, கல்லாபுரம், சிங்கையன் புதூர் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட 15,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.



தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் சொட்டுநீர் பாசனம் மூலம் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்த வாழை மரங்கள் ஒரு மணி நேரம் வீசிய காற்றில் அடியோடு சாய்ந்ததைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



இந்நிலையில், வாழைத்தார்கள் இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யும் நேரத்தில் வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திருப்பதாகவும் எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...