சிறுமுகையில் தடை உத்தரவை மீறி செயல்பட்ட காளான் உர தொழிற்சாலை - வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் உள்ள காளான் உரத்தொழிற்சாலையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் சுவாச பிரச்சினை ஏற்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய சோதனைக்காக 4 நாட்கள் மூட உத்தரவிட்டதை மீறி செயல்பட்டதால், தொழிற்சாலைக்கு பூட்டு போட்டு வட்டாட்சியர் மாலதி நடவடிக்கை எடுத்தார்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே அதிகாரிகளின் உத்தரவை மீறி செயல்பட்ட காளான் உர தொழிற்சாலைக்கு தாசில்தார் பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காளான் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த உரத்தொழிற்சாலையில் உரம் தயாரிக்க மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை மற்றும் சருமநோய் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் இந்த காளான் உரத்தொழிற்சாலையை மூட வேண்டும் என கடந்த ஓராண்டாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று தொழிற்சாலைக்கு உரம் தயாரிக்க மூலப்பொருட்களை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து சிறுமுகை - இலுப்பநத்தம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வந்து தங்களக்கு உரிய தீர்வு காணும் வரை லாரியை செல்ல அனுமதிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி மற்றும் சிறுமுகை போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தாசில்தார் மாலதி உறுதி செய்யப்பட்டதால் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சோதனை நடத்த பரிந்துரை செய்ததுடன் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு அறிக்கை வரும் வரை 4 நாட்களுக்கு தொழிற்சாலை செயல்பட தடை விதித்து தாசில்தார் மாலதி உத்தரவிட்டார்.

தாசில்தாரின் இந்த அதிரடி உத்தரவை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் அறிவிப்பை மீறி செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார்.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் காளான் உரத் தொழிற்சாலையில் லாரியில் எடுத்து வரப்பட்ட மூலப் பொருட்களை இறக்கி வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த கிராம மக்கள் மீண்டும் தொழிற்சாலையின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் தாசில்தார் மாலதி தொழிற்சாலைக்கு 4 நாட்களுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...