பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துக..! - மேட்டுப்பாளையத்தில் வி.ஏ.ஓக்கள் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி மேட்டுப்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு உடனடியாக வழங்க வேண்டும். பயணப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை மாவட்ட பிரச்சார செயலாளர் ரவிக்குமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்ட தலைவர் மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும், பயணப்படியினை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு காலதாமதமின்றி பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திகேயன், தனபால், மலர் மணி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...