கோவையில் விவசாயிகளுக்கு உதவிய பார்க் குழுமம் - ரூ.2 லட்சத்திற்கான காசோலை ஆட்சியரிடம் ஒப்படைப்பு!

கோவையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் SC/ST விவசாயிகளுக்கான பங்குத்தொகையாக ரூ. 2 லட்சத்தை பார்க் கல்வி குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் வழங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல நூறு SC/ST விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருள், மின்கல தெளிப்பான், வேளாண் உபகரணம், தார்ப்போலின் போன்ற உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதன் விலையில் ஒரு பகுதியை விவசாயிகள் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், இந்தப் பங்குத் தொகையை செலுத்த முடியாத விவசாயிகளின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சத்தை நன்கொடையாக பார் கல்வி குழுமம், கோவை ஆட்சியரிடம் வழங்கியது.

இதன் மூலம் 128 விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்தத் தொகைக்கான காசோலையை பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் ஒப்படைத்தார்.

மேலும் இந்தத் திட்டத்திற்காக RAAC ரவீந்திரன் ரூபாய் 60 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது வேளாண்துறை இணை இயக்குநர் சஃபி அஹமத் உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...