வால்பாறையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும்படி கோரிக்கை!

வால்பாறையில் வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும், தூய்மை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்வதோடு, ஊதிய உயர்வு வழங்ககோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி மூலம் பொது மக்களுக்கு பயன்பாடக்கூடிய வளர்ச்சி பணிகளை செய்துதர வலியுறுத்தி தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்ட கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஏஐடியுசி சங்க பொதுச்செயலாளர் மோகன் தலைமையில் வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தூய்மை தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பணி நிரந்தரம் செய்வதோடு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியவற்றின் பணிகளை நிறைவு செய்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும், தொழில் வரி பிடித்து செய்து வரும் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் தேவையான பணிகளை நகராட்சி மூலம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...