தாராபுரம் நகராட்சிக் கூட்டம் - பள்ளிகளில் காலை சிற்றுண்டி, குடிநீர் தேவைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு!

குப்பைகளை அப்புறப்படுத்த ரூ. 4.02 கோடி, முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பள்ளிகளில் சமையல் கூடம் கட்ட ரூ.28 லட்சம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முன்னேற்பாடாக ரூ.60 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்குவது உள்ளிட்ட 86 தீர்மானங்கள் தாராபுரத்தில் நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணைத்தலைவர் ரவிச்சந்திரன், ஆணையாளர் ராமர் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.



தாராபுரம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. பின்னர் வார்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகராட்சித் தலைவர் பாப்பு கண்ணன் பதிலளித்தார்.



1-வது வார்டு பகுதியில் குடியிருக்கும் சிலருக்கு வீட்டுமனை பட்டா கிடையாது. வீட்டு வரி ரசீது கொடுத்தால் குடிநீர் இணைப்பு வழங்க முடியுமா? என திமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நகராட்சித் தலைவர், வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கும் நகராட்சி சார்பில் தண்ணீர் கொடுப்பது நம்முடைய கடமை. வீட்டுமனை ரசீது கொடுத்தால் போதும். தண்ணீர் இணைப்பு கொடுக்கலாம் என்றார்.



இந்தக் கூட்டத்தில் குப்பைகளை அப்புறப்படுத்த ரூ.4.02 கோடியும், முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு பள்ளிகளில் சமையல் கூடம் கட்ட ரூ.28 லட்சமும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முன்னேற்பாடாக ரூ.60 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்குவது உள்ளிட்ட 86 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வெ.கமலக்கண்ணன், சாந்தி, முபாரக் அலி, துரை சந்திரசேகர், நாகராஜ் முத்துலட்சுமி, புனிதா, சீனிவாசன், சக்திவேல் ஸ்ரீதரன், ஷாலினி பவர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...