தாராபுரத்தில் திமுக நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் - நாளை நடைபெறும் என அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும். நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.


திருப்பூர்: தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் இது தொட்ரபாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயற்குழு கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கீழ்க்கண்ட இடங்களில் நடக்கிறது. தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜன் முன்னிலை வகிக்கிறார்.

நாளை காலை 9.30 மணிக்கு குண்டடம் பொடாரம்பாளையம் மணி மண்டபத்தில், குண்டடம் மேற்கு ஒன்றியம், ருத்ராவதி பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

காலை 11.30 மணிக்கு தாராபுரம் சிவரஞ்சனி திருமண மண்டபத்தில், தாராபுரம் நகரம், தாராபுரம் ஒன்றியம், சின்னக்காம்பாளையம் பேரூர், கொளத்துப்பாளையம் பேரூர் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு மூலனூர் எஸ்.ஜே.எம். திருமண மண்டபத்தில், மூலனூர் கிழக்கு ஒன்றியம், மூலனூர் மேற்கு ஒன்றியம், கன்னிவாடி பேரூர், மூலனூர் பேரூர் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் உள்ள நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய, நகர வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...