திருப்பூர் அரசு மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



திருப்பூர்: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, அரசு மருத்துவமனைகளில் கட்டாய முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.



அதன்படி, திருப்பூர் பெருச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளாகம் முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.



மேலும், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்களும் அரசு மருத்துவமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...