கோவை அருகே டெம்போ மீது இரு சக்கரவாகனம் மோதி விபத்து - 11 வகுப்பு மாணவர் பலி!

கோவை துடியலூர் அடுத்துள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே சரக்கு ஏற்றி வந்த டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் உயிரிழந்தார். இதுகுறித்து பி.என்.பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை கே.என்.ஜி.புதூரில் இருந்து ஹாலோபிளாக் கற்கள் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று இன்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

டெம்போவை சூர்யா என்பவர் ஓட்டிவந்துள்ளார். அவருடன் 2 வடமாநில தொழிலாளர்களும் இருந்துள்ளனர். அவர்கள் நரசிம்மநாயக்கபாளையம் ஜோதிகாலனி அருகே வரும்போது, அதேதிசையில் இருசக்கர வாகனத்தில் வந்த 11வகுப்பு மாணவர் பிரவீன் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது மோதினார்.

அதில், டெம்போவிவின் முன்சக்கரத்தில் சிக்கிய இருசக்கர வாகனம் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து சென்றது.



அப்போது சாலையை கடப்பதற்காக நின்றுகொண்டு இருந்த லாரி மீது மோதியதில் டெம்போ ஒரு சைடாக விழுந்தது. அப்பொது டெம்போவில் இருந்த ஹாலோபிளாக் கற்கள் அனைத்து சாலையில் கொட்டியது.



இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த மாணவர் பிரவீன் பலத்த காயம் அடைந்தார். டெம்போ ஓட்டுநர் மற்றும் வடமாநில வாலிபர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சாய்பாபாகாலனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்தும், கீழே விழுந்து கிடந்த ஹாலோபிளாக் கற்களை பொதுமக்களுடன் இணைந்து அப்புறப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 11ம் வகுப்பு மாணவர் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...