திருப்பூரில் காவலர்களுக்கு யோகா பயிற்சி - மாநகர காவல்துறை ஏற்பாடு

திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் வழங்கப்பட்ட யோகா பயிற்சியில் ஏராளமான காவலர்கள் கலந்துகொண்டனர். மன வலிமையை ஊக்குப்படுத்தும் யோகா பயிற்சியும், மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.


திருப்பூர்: காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் காவலர்களுக்கு சரியான உடற்பயிற்சி, மன வலிமையை ஊக்குப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக சட்டம் -ஒழுங்கு இயக்குனர் சங்கர் வலியுறுத்தினார்.



அதனை தொடர்ந்து, திருப்பூர் மாநகர காவல் துறையில் பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு மனவலிமையை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில், கொங்கு நகர் பகுதி காவல் உதவி ஆணையர் அணில் குமார் தலைமையில் ரயில் நிலையம் அருகில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



இதில், மன வலிமையை ஊக்குப்படுத்தும் யோகா பயிற்சியும், மூச்சுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் வடக்கு காவல் நிலையம்,15 வேலம்பாளையம் காவல் நிலையம் மற்றும் வடக்கு மகளிர் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...