கோவையில் கண்ணில் கருப்பு துணி கட்டி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தின் கீழ் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்டம் சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவது போல் சிறப்பு ஓய்வூதியம், அகவிலைப்படியுடன் 6750 ரூபாய் வழங்க வேண்டும்,

தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில் 50% ஒதுக்கீடு செய்து தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணி மூப்பு அடிப்படையில் அமர்த்திடவேண்டும், காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு சத்துணவு திட்டத்தின் கீழ் இணைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்ணில் கருப்பு துணி கட்டியபடி அவர்களது இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...