கொரோனா முன்னெச்சரிக்கை - கோவை அரசு மருத்துவமனையில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள், மருத்துவர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. நேற்றைய (மார்ச்.31) நிலவரப்படி கோவையில் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இதுவரை 108 பேருக்கு தொற்றுபாதித்துள்ளது.

சென்னை 38 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை சென்னையில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுவரை தமிழகத்தில் 777 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைவரும் இன்று முதல் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக சிம்பிளிசிட்டியிடம் பேசிய மருத்துவமனையின் இயக்குநர் நிர்மலா, மருத்துவமனை என்பது கொரோனா உள்ளிட்ட அனைத்து வகையான தொற்றுகளுக்குமான மையமாக உள்ளது. எனவே, நோய் தொற்று குறித்து முன்னெச்சரிக்கையை ஏற்படுத்தவும், நோயிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மருத்துவமனையில் இன்று 2 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்றுப்பரவலைத் தடுக்கவும், குறைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...