கோவையில் மதுபோதையில் தகராறு - கல்லூரி மாணவர் குத்திக்கொலை

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மதுபோதையில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த தகராறில், கத்தியால் குத்தப்பட்டு 21 வயது இளைஞர் புவனேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது23). ஆட்டோ ஓட்டுநரான இவரது குடும்பத்தை பற்றி அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நந்தகுமார் (வயது22) என்பவர் அபாசமாக பேசியதாக தெரிகிறது. இது குறித்து பாலாஜிக்கும், நந்தகுமாரும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியில் உள்ள கோவில் அருகே பாலாஜி மற்றும் அவரது நண்பர்களும், நந்தகுமார் நண்பர்கள் குழுவினரும், மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மீண்டும் பழைய பிரச்சனையை வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இரண்டு குழுவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த பாலாஜியின் நண்பரான 17 சிறுவர் ஒருவர், கல்லூரி மாணவரான புவனேஷ்குமார் (வயது21), மற்றும் சந்தோஸ் , சஞ்சய் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், நிலை தடுமாறி விழுந்த புவனேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த சந்தோஷை கோவை அரசு மருத்துவமனைக்கும், சஞ்சய் என்ற இளைஞரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார், புவனேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...