தமிழக மக்களின் பாகுபலியே.. கழகப் பொதுச் செயலாளரே..! - கோவையில் ஈபிஎஸ்-க்கு கட்அவுட் வைத்த அதிமுகவினர்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், கோவை விளாங்குறிச்சியில் அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமிக்கு பாகுபலி போன்ற கட் அவுட் வைத்துள்ளனர். அதில், தமிழக மக்களின் பாகுபலியே.. கழகப் பொதுச் செயலாளரே.. தங்களை வாழ்த்தி வணங்குகிறோம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பாகுபலி வேடத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட் அவுட் வைத்துள்ளனர்.

அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அண்மையில் வெளியானது. அந்த தீர்ப்பில், கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தீர்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர், அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதி அதிமுகவினர் "தமிழக மக்களின் பாகுபலியே!! கழகப் பொதுச் செயலாளரே!!! தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்" என்ற வாசகங்களுடன் கட் அவுட் வைத்துள்ளனர்.

அந்த கட் அவுட்டில், பாகுபலி வேடத்துடனும், கையில் வாளுடனும் எடப்பாடி பழனிசாமி, நிற்பதை போன்று வடிவமைத்துள்ளனர். மேலும் அந்த கட் அவுட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், ஜெயராமன் ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...