நகராட்சி கடைகளில் அதிக வாடகை வசூல் - வால்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமாக 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளுக்கு அதிகப்படியான வாடகை வசூல் செய்வதால், கடைக்காரர்கள் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதை கண்டித்து வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் நகராட்சிக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் கடை வாடகை அதிகமாக உள்ளதால் வாடகை செலுத்த முடியாமல் வியாபாரிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன்பு வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

அதில்,ஒரு சில கடைகள் வாடகை பணத்தை செலுத்தி விட்டு கடையை மீண்டும் நடத்தி வருகின்றனர். மீதம் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து, தற்போதுவரை அவை திறக்கப்படாமல் உள்ளன.

தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் கடைகளுக்கு இரண்டு மாதம் வாடகை செலுத்தாவிட்டல், நகராட்சி நிர்வாகம் உடனடியாக கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

கடைகளுக்கு அதிகப்படியான வாடகை வசூல் செய்வதால், கடைக்காரர்கள் கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.



மேலும், அகற்றப்பட்ட சாலையோர கடைகளுக்கு பதிலாக, நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக சீல் வைக்கப்பட்ட கடைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கட்சியின் செயலாளர் பரமசிவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, சாலையோரம் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும், நகராட்சி கடைகளுக்குள் மழைக்காலங்களில் தண்ணீர் வருவதை சரி செய்து தர வேண்டும், கடை வாடகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

சூலூர் நாகம நாயக்கன்பாளையம் குட்டையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைக் கலக்கக் கடும் எதிர்ப்பு

கோவை சூலூர் அருகே பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகம நாயக்கன் பாளையம் கிராமத்தில் உள்ள ஊராழி குட்டையை ஆழப்படுத்தவும், சுத்...

கோவை SRIT கல்லூரியில் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெறும் மண்டல செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு 2.0 (RAS 2...

மாநில காவல்துறை பணித்திறன் போட்டியில் கோவை போலீஸ் நாய்களுக்கு இரண்டாம் பரிசு

ஆவடியில் உள்ள TSP Regimental Centre (RC)-இல் 21.09.2026 முதல் 25.09.2026 வரை நடைபெற்ற மாநில அளவிலான காவல்துறை பணித்திறன்...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...

கோவை இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கொலை வழக்கில் தடை செய்யப்பட்ட PFI அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுப...

கோவையில் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.63க்கு உட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 25, 2...