அன்னூர் அருகே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி கைது - 1.100 கிராம் கஞ்சா பறிமுதல்!

கோவை அன்னூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கங்காதர் பூவே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 1,100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அன்னூர் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அன்னூர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அன்னூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த லம்போதர் பூவே என்பவரது மகன் கங்காதர் பூவே (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981-81212 என்ற எண்ணில் தொலை பேசி வாயிலாகவும். மற்றும் வாட்ஸ்அப் மூலம் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...