மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா? - உடுமலை வனப்பகுதி எல்லைகளில் உதவி வன பாதுகாவலர் திடீர் ஆய்வு!

உடுமலை வனப்பகுதி எல்லைகளில், எல்லையோர கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் வனக்குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வன எல்லை பகுதிகளில் சட்டவிரோத மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் வனக்கோட்டத்தில் வன எல்லை பகுதிகள், எல்லையில் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வண்ணம் மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டு உள்ளதா என்றும், சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப் படுகிறதா என்பதையும் மின் வாரிய பணியாளர்களுடன் வனப்பணியாளர்கள் இணைந்து தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மற்றும் கோவை வனப்பகுதி எல்லைகளில் மின்சாரம் தாக்கி காட்டு யானைகள் இறந்ததை தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்டத்தில் சோதனை செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.



இதன் அடிப்படையில், உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை பகுதிகளில் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ்ராம், உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார் மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது மின் இணைப்புகள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதா என்றும் சோலார் மின் வேலிகளில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என்பதை தணிக்கை செய்து மக்களுக்கு தாழ்வாக செல்லும் மின் இணைப்புகளால் வன உயிரினங்கள் குறிப்பாக யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும், சோலார் மின் வேலிகளை சட்டப்படி முறையாக பயன்படுத்துமாறும் வலியுறுத்தினர்.



வன எல்லைப்பகுதிகளில் தாழ்வாக மின் இணைப்புகள் அமைக்கப்பட்டிருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக மின்சாரத்தை பயன்படுத்தி மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தாலோ அதன் விவரங்களை கீழ் கண்ட தொலைபேசி எண்களுக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை வனச்சரகம்: 9487987173, 7502289850, 9486659701, 9487787731

அமராவதி வனச்சரகம்: 9047066460, 9486587797.

கொழுமம் வனச்சரகம்: 8072981528, 8778725381.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...