மேட்டுப்பாளையம் அருகே உணவகத்துக்குள் புகுந்து கணவன், மனைவி மீது தாக்குதல்! - பாஜக பிரமுகர்கள் மூவர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டியில் உணவகத்தில் புகுந்து கணவன், மனைவி இருவர் மீது கொலை மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தொழில்போட்டி காரணமாக உணவகத்திற்குள் புகுந்து கணவன் மனைவி மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை - தோலம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது மனைவி கீதா (34). கணவன், மனைவி இருவரும் தோலம்பாளையம் சாலையில் உணவகம் நடத்தி வருகின்றனர். இந்த உணவகத்தில் விலை குறைவாகவும், தரமான பொருட்களை கொண்டு தயாரித்து உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்களது கடைக்கு அருகே வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த பிரபு தனது கடையில் வேலை பார்க்கும் காரமடையை சேர்ந்த ஞானசேகர் (54), விஜயகுமார் (52) ஆகியோருடன் சரவணகுமாரின் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர்களிடம் நீங்கள் எப்படி, நான் விற்பனை விட குறைவாக விற்கலாம் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர்களிடம் நீ எப்படி உணவகம் நடத்துகிறாய் என்று நான் பார்க்கிறேன் எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினர். இதுகுறித்து சரவணகுமாரும், அவரது மனைவியும் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை தாக்கிய பாஜக பிரமுகர்களான பிரபு, ஞானசேகர், விஜயகுமார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...