திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் இருவர் கைது!

திருப்பூரில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் நண்பரை தாக்குவதை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அருகே ஆட்டோ ஓட்டுனரை கத்தியால் குத்திக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே இவரது நண்பர் சக்திவேலுக்கும் அவரது, நண்பர்களான மாரியப்பன் மற்றும் முனியசாமி இருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன் சக்திவேலிடம், மாரியப்பன், முனியசாமி இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து மணிகண்டன் மூன்று பேரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மோதலை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பன் மற்றும் முனியசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை தாக்க முயன்றதை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...