மதுபாட்டில்களை டாஸ்மாக்கிலேயே திரும்ப பெறும் திட்டம் - கோவையில் இன்று முதல் அமல்!

கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப்பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மதுபான பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டம் வரவேற்கத்தக்கது என சுற்றுச்சூழல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலேயே திரும்பப்பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

இந்த திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிற மாவட்டங்களிலும் காலி மதுபாட்டல்களை பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் கோவை மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து பத்து ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து மது பிரியர்கள் பத்து ரூபாய் பணத்தை திரும்ப பெற்று செல்கின்றனர்.

இத்திட்டத்தை பற்றி சுற்றுச்சூழல் அமைப்பை சேர்ந்த சதாம் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் அதிகளவில் சுற்றுலா தளங்கள் உள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியாறு மற்றும் டாப்சிலிப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனப்பகுதியை சார்ந்து உள்ளதால் வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு, வனத்துறையினர் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டு கொள்ளாமல் வனப்பகுதியில் மது பாட்டில்களை வீசி வருகின்றனர்.

இதனால் யானை மற்றும் மற்ற வன விலங்குகளுக்கு மது பாட்டில்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் அபாயம் உள்ளது. தற்போது மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் சுற்றுலா பயணிகள் மற்ற இடங்களில் வீசாமல் வருவதற்கு வாய்ப்புள்ளது.



பாட்டில்களை திரும்பத் திரும்ப திட்டம் வரவேற்கத்தக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...