தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக நாளை தண்ணீர் திறப்பு!

தாராபுரம் அருகேயுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும், அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணையில் இருந்து நாளை முதல் வரும் 10ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணை மூலம் சுமார் 6,060 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது உப்பாறு அணையில் இருந்து நாளை விவசாய பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த தண்ணீர் திறப்பினால் சகுனிபாளையம், கெத்தல்ரேவ், வரப்பாளையம், நஞ்சிம்பாளையம், ஆலம்பாளையம் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவைக்காகவும் தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் தண்ணீர் வேண்டியும் விவசாயிகள் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு உடனடியாக நாளை உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் வலது மற்றும் இடது கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை இரண்டாம் தேதி முதல் வருகின்ற பத்தாம் தேதி வரை மொத்தம் 130.99 மில்லியன் கன அடி தண்ணீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உப்பாறு அணையில் நாளை தண்ணீர் திறந்து விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...