பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவையில் மிகவும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இன்று திருகல்யாண உற்சவ நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில் நேற்றிரவு பல வகையான சீர் தட்டுகளுடன் 16 வகையான திரவியங்களால் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பட்டீஸ்வர பெருமானுக்கும், மரகதாம்பிகை அம்பாளுக்கும் பட்டாடை மற்றும் ஆபரணங்கள் சார்த்தப்பட்டு ஹோமங்கள் நடந்தன. பின்னர் மரகாம்பிகை அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டது. அதன் பிறகு பட்டீஸ்வர பெருமானும் மரகதாம்பினை அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதனையடுத்து, பக்தர்கள் பாதநமஸ்காரம் செய்து திருக்கல்யாண மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் 22,692 ரூபாய் பக்தர்களால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...