வால்பாறையில் குறுத்தோலை ஞாயிறு தின விழா - குறுத்தோலை ஏந்தி பவனி வந்த கிறிஸ்தவர்கள்!

குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி வால்பாறையில் உள்ள பல்வேறு தேவாலயங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள், கையில் குறுத்தோலை ஏந்தி, ஒசானா பாடல் பாடியபடி பவனி வந்தனர். கல்லூரி வளாகம் அருகே தொடங்கிய ஊர்வலம், சி.எஸ்.ஐ ஆலயத்தில் நிறைவடந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறை அருகே குறுத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குறுத்தோலை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.

உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்களால் இன்று குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறையிலும் கிறிஸ்தவர்களால் குறுத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது.



அதன்படி வால்பாறையிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் சி.எஸ்.ஐ மறை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இணைந்து கல்லூரி வளாகம் அருகே தங்களது குறுத்தோலை பவனியை தொடங்கினர்.



கையில் குறுத்தோலையை ஏந்தியபடி ஒசானா பாடல் மற்றும் இயேசுவின் தாசனே என்ற பாடலை பாடி பவனியாக சி.எஸ்.ஐ ஆலயம் வளாகம் வந்தனர். இதனையடுத்து, ஆலய ஆயர் பால் சுந்தர் சிங் தலைமையில் விசேஷ பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் வால்பாறை இருதய ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் ஆகியோர் தலைமையில், விசேஷ பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் பவனியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக இருதய ஆலயத்தை அடைந்து குறுத்தோலை ஞாயிறு திருப்பலி நடைபெற்றது.



இதேபோல வால்பாறை அடுத்துள்ள முடிஸ் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்கு தந்தை மரிய ஆன்டணி தலைமையிலும் குறுத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...