சூலூரில் பத்திரிகையாளர் எனக்கூறி ஊராட்சி தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல் - ஆடியோ வெளியீடு!

சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை ஊராட்சி மன்ற தலைவரிடம் பத்திரிகையாளர் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அளித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை. மேலும் மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சூலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரிடம் பத்திரிகையாளர் எனக்கூறி மிரட்டி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர் ஜோதிராஜ். இவர் கடந்த 12 வருடங்களாக ஜல்லிப்பட்டி ஊராட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று ஜோதிராஜன் அலைபேசிக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அப்போது, ஜோதி ராஜிடம் பேசிய நபர் தனது பெயர் ராஜா என்றும் தான் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் வழக்கறிஞர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு ஜல்லிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுக்கள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நீங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி வருகிறீர்கள், இதுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தரப்பட்ட தகவல்களை செய்தியாக வெளியிடாமல் இருக்க 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் உங்களின் புகைப்படத்தோடு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் ஜோதிராஜ்-க்கு கூகுள் பே நம்பரையும் அனுப்பியுள்ளார். மாலை 4 மணி வரை அந்த நபருக்கு ஜோதிராஜ் பணம் அனுப்பாததால் தொடர்ச்சியாக அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தவறு செய்திருந்தால் தாராளமாக செய்து வெளியிட்டுக் கொள்ளுங்கள் எனவும் ஜோதிராஜ் அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு நம்பரில் இருந்து செய்தியாளர்கள் என கூறி சென்னையிலிருந்து பேசுவதாகவும் திருப்பூரில் இருந்து பேசுவதாகவும், பல்லடத்தில் இருந்து பேசுவதாக கூறி ஜோதிராஜை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.



இதுகுறித்து ஜோதிராஜ் மற்றும் அருகிலுள்ள ஊராட்சி மன்ற தலைவர்களும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எந்தத் தவறும் செய்யாமல் மக்கள் பணியை முறையாக செய்யவிடாமல் பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்திரிகையாளர் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிராஜை பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ மற்றும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய மெசேஜ் ஆகியவை தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை காவல் துறையினர் பணம் கேட்டு மிரட்டிய பத்திரிகையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...