உடுமலை அருகே தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்கம் - எம்.பி. சுப்பராயன் பங்கேற்பு

உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக் நகர், கணேசபுரம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குருவம்மாள் செளந்தரராஜன். (இந்தியகம்யூனிஸ்ட்கட்சி) வார்டு ‌வளர்ச்சி நிதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதி, தார்சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் எம்.பி சுப்பராயன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜனார்த்தனன் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...