குடிமங்கலம் காவல்துறையின் அலட்சியத்தால் விவசாயி பலி - ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்கல்!

உடுமலை அருகேயுள்ள பெரிய பட்டியல் பகுதியில் நடந்த விபத்தின் போது, பழனியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் படுகாயமடைந்தார். மேலும் போலீசாரின் அலட்சியத்தால் அவர் உயிரிழந்ததால், அவரின் குடும்பத்திற்கு ரூ.22.10 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட எஸ்பி சாசாய் சாய் வழங்கினார்.


திருப்பூர்: உடுமலை அருகே விபத்தில் காயமடைந்து போலீசாரின் அலட்சியத்தால் இறந்த விவசாயியின் குடும்பத்திற்கு மாவட்ட எஸ்.பி. இழப்பீட்டு தொகையை வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய பட்டியல் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் பழனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயி படுகாயமடைந்தார். குடிமங்கலம் காவல்துறையினர் அவரை உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவரது வீட்டுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மனைவி முத்துலட்சுமி கணவனை காணாமல் பல இடங்களில் தேடியதோடு பழனி தாலுகா கீரனூர் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் அவர் கணியூர், மடத்துக்குளம், குடிமங்கலம், காமநாயக்கன்பாளையம் காவல் நிலையங்களில் விசாரித்த போது எந்த விபத்தும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கீரனூர் காவல்துறையினர் நவம்பர் 5ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து தேடுவதற்காக குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கீரனூர் காவல்துறையினர் நேரடியாக விசாரித்த போது, குடிமங்கலம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை என எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் நவம்பர் 11ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது அனாதை சடலம் உள்ளது அதை அடையாளம் காட்டுங்கள் என குடிமங்கலம் காவல் துறையினர் முத்துலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நேரில் சென்ற முத்துலட்சுமி இறந்தது கணவர் ஆறுமுகம் என்பதை உறுதி செய்தார். தனது கணவர் விபத்துக்குள்ளாகி 15 நாட்கள் சிகிச்சையில் இருந்தும் குடிமங்கலம் காவல் துறையினரின் அலட்சியம் காரணமாக தான் தரமான சிகிச்சை அளிக்க முடியவில்லை.

எனவே குடிமங்கலம் காவல் ஆய்வாளர் மகேந்திரன் (தற்பொழுது ஒகேனக்கல்) காவல் உதவி ஆய்வாளர் செல்வன் (உடுமலை நெடுஞ்சாலை ரோந்து) நாகராஜ் (குமரலிங்கம்) திருமலை ராஜன் (ஆய்வாளர் மசனகுடி) மதிவாணன் (ஓய்வு) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணையில், விபத்து ஏற்பட்டு போலீசார் பணியில் அஜாக்கிரதையாக இருந்தது உறுதி செய்து அறிக்கை அளித்தார். குடிமங்கலம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் 2014 ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் 2022 ஜூலை 20 அன்று பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டை 12 சதவீதம் வட்டியுடன் தமிழக அரசின் உள்துறை செயலாளர் வழங்க வேண்டும் என்றும், அரசு கணக்கிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு தொகையை பணியில் அலட்சியமாக இருந்தது மற்றும் ஆவணங்களை மறைத்ததாக குற்றத்தில் ஈடுபட்ட அப்போதைய குடிமங்கலம் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்களின் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.



அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாசாய் சாய் பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் 22 லட்சத்து 10 ஆயிரத்து 250 ரூபாய் காண வங்கி வரவோலையை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...