தாராபுரம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பீதியில் பொதுமக்கள்!

தாராபுரம் அருகேயுள்ள மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சிறுத்தை நடமாட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர், கன்னிவாடி, குண்டடம், கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை சுற்றித் திரிந்ததாக தகவல்கள் பரவின. இதனிடையே நேற்று அதிகாலை தாராபுரத்தை அடுத்த பெரமியம் ஊராட்சிக்குட்பட்ட வெட்டுக்காடு பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிந்ததை பொன்னுச்சாமி என்ற விவசாயி நேரில் பார்த்து ஊதியூர் வனத்துறை அதிகாரி ராஜேஸ்வரி, ஆனைமலை புலிகள் காப்பக அலுவலர்கள் நந்தகுமார், நவீன், பிரகாஷ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.



இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த வனத்துறையினர், சிறுத்தையின் காலடி தடத்தை ஆய்வு செய்து கிராம மக்களைப் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று பொம்மிபாளையம் ஊராட்சி தொடக்க பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் வெட்டுக்காடு பகுதியிலிருந்து 6 கிலோமீட்டர் தென்பகுதியில் உள்ள மோளக் கவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் என்பவர் அமராவதி ஆற்றின் கரையோரம் உள்ள தனது வாழை தோட்டத்திற்கு வாழைத்தார் வெட்டுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது வாழைத் தோட்டத்திற்குள் படுத்திருந்த சிறுத்தை ஆள் சத்தம் கேட்டு அமராவதி ஆற்றை நோக்கி விரைந்து சென்று புதர்களுக்குள் மறைந்தது. இதனை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், பொதுமக்களிடமும் பெரமியம் ஊராட்சி துணைத் தலைவர் புகழேந்தியிடமும் கூறினார்.



மேலும் வனத்துறை அதிகாரிகளுக்கு அமராவதி கரையோரம் பதிவாகியுள்ள சிறுத்தையின் காலடி தடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டம் தொடர்வதால் இன்றும் அப்பகுதியில் உள்ள பொம்மி பாளையம் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரையூர் அருகேயுள்ள மோளக்கவுண்டன் புதூர் கிராம இளைஞர்கள் தங்களது கைகளில் தடி, கம்புகளுடன் வாழைத்தோட்டம் உள்ள பகுதியில் சிறுத்தையை தேடும் பணியில் தொடங்கியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...