கொளுத்தும் கோடை வெயில் - கோவை குற்றால அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

. கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் பலரும் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர்வீச்சிகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.


கோவை: கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



தமிழகத்தில் கோடைக்காலம் 2 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலிலிருந்து தப்பித்து கொள்ளவும், குளுமையை அனுபவிக்கவும், சுற்றுலாத்தலங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அதிகளவில் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.



குறிப்பாக கோவையிலுள்ள சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.



மேலும் அருவியில் குளிக்கும் பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி 20க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...