உடுமலையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் - ஒசன்னா கீதம் பாடி பவனி வந்த கிறிஸ்தவர்கள்

குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்ற பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடிக்கொண்டே ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: உடுமலை இம்மானுவேல் ஆலயம், பழனி ரோடு கிறிஸ்து நாதர் ஆலயம் குருத்தோலை பவனி நடைபெற்றது.

இந்த பவனியில் திருச்சபை ஆயர்கள், மேரி செல்வராணி உதவி ஆயர் லூதர் சேகர், செயலாளர் பால் ஜெயசந்திரன், பொருளாளர் ஜெயக்குமார் , கிறிஸ்துநாதர் ஆலயம் ஆயர் செல்வராஜ், பொருளாளர் ராஜசேகரன்,



செயலாளர் வில்லிங்டன் ஜெபராஜ் மற்றும் திருச்சபை மக்கள், சேகரக்குழு உறுப்பினர்கள், பாடகர் குழுவினர் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஞாயிறு பள்ளி குழந்தைகள், திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற பவனியில் கலந்து கொண்ட அனைவரும் ஓசன்னா கீதம் பாடி 2000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து எருசலேம் நகர் வீதியில் வலம் வந்த நிகழ்வை நினைவுகூர்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...